Sorting by

×

மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னெள உள்பட 49 தொகுதிகளில் சனிக்கிழமையுடன் (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வயநாட்டை தொடர்ந்து ரேபரேலியிலும் போட்டியிடுகிறார்.

அதிலும் முக்கியமாக, அரசியலில் சிறுவயதிலிருந்தே ஆழ்ந்த உறவு தனக்கும் பிரியங்கா காந்திக்கும் இருந்து வருவதாகவும், ஆனால் தங்கள் இருவரின் உறவுக்கிடையே எப்போதும் அரசியல் புகுந்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

रायबरेली जाते वक्त मैं और प्रियंका कुछ देर के लिए बचपन की गलियों से भी होकर गुज़रे।

बहुत सी खट्टी-मीठी यादें हैं, दादी का ज्ञान, पापा की पसंदीदा जलेबियां, प्रियंका के बनाए केक, ऐसा लगता है जैसे सब कल की ही बात हो।

बचपन से हमारा राजनीति से गहरा रिश्ता रहा है, पर राजनीति कभी… pic.twitter.com/fOdCMyFN5V

Advertisements 12

— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2024

இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி இன்று(மே 18) வெளியிட்டுள்ள காணொளியில், ரேபரேலியில் தானும், தமது சகோதரி பிரியங்கா காந்தியும் குழந்தைப் பருவத்தில் சுற்றித் திரிந்த தெருக்களில் இப்போதும் சிறிது நேரம் உலாவியதாக குறிப்பிட்டு பற்பல இனிமையான நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

தங்களுடைய பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்) ஞானம், தந்தைக்கு பிடித்த இனிப்புகள், பிரியங்கா காந்தி உருவாக்கிய கேக்குகள் இவையனைத்தையும் நினைவுகூர்ந்துள்ளார் ராகுல் காந்தி.

அந்த காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவின் முன்னேற்றத்திற்கும்,நாட்டை வழிகாட்டுவதிலும் ரேபரேலிக்கு முக்கிய பங்கு உள்ளது. நெடுங்காலமாக உத்தரபிரதேசத்தின் அரசியல், சித்தாந்த மையமாக ரேபரேலி திகழ்கிறது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் வழிகாட்டியதும் ரேபரேலி தான். ரேபரேலி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி காட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் சேவையாற்றுவோர், தங்கள் குடும்பத்தை மதிக்கவில்லையெனில், குடும்பத்துடன் சுமூகமான உறவை தொடர முடியவில்லையெனில், குடும்பத்திற்கு வெளியிலும் நல்லுறவைப் பேண முடியாது. அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பொய் சொன்னால், அரசியலிலும் பொய்களை உரைப்பீர்கள் என்று மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *