இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் யார் பிரதமர் என்பது குறித்த கேள்விக்கு, ராகுல் தான் தனது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
மக்களவைத் தேர்தலின் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டியொன்றில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் யாரை பிரதமராகப் பார்க்க விருப்பம் என்பது குறித்து தனது விருப்பத்தைக் கூறியுள்ளார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பங்குகளின் விலை உயருமாம்!
பேட்டியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ”மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணியினர் போட்டியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியையே நான் விரும்புகிறேன், இது எனது தனிப்பட்ட விருப்பம். ஏனெனில், நாட்டின் இளைஞர்கள் மத்தியில் ராகுல் மிகவும் பிரபலமானவர். நாட்டை அழகான எதிர்காலத்திற்கு கூட்டிச் செல்லும் திறனும் அவருக்கு உண்டு. பிரியங்கா காந்தியும் வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிடுவார். காங்கிரஸுக்கு குறைந்தது 128 இடங்கள் கிடைக்கும். இந்தியா கூட்டணி மற்றும் பிற பாஜகவின் எதிர்ப்புக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்” என்று தன் விருப்பத்தினைத் தெரிவித்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI