ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விராட் கோலி
ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். குஜராத் டைட்டன்ஸ் 93 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. சாய் சுதர்சன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதனையடுத்து, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டிய ஷுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஜோஸ் பட்லர் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களும், ராகுல் திவாட்டியா 9 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் பீட்டர்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI